ஜனாதிபதி அலுவலகத்தினால் கடந்த மே மாதம் 15 ஆம் திகதி நடத்தப்பட்ட விலைமனுக்கோரல் முறையிலான வாகன விற்பனையின் இரண்டாவது கட்டம் தொடர்பில் சில ஊடகங்கள் ஊடாகவும் குறிப்பாக சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் பொய்யான செய்திகள் பரப்பப்படுகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சொத்து முகாமைத்துவ சுற்றுநிருபம் 05/2024 கீழ் இது தொடர்பில் செயலாற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட விலைமனுக்கோரல் விற்பனையின்போது அரசாங்கத்தின் திறந்த விலைமனுக்கோரல் படிமுறைகளை பின்பற்றியுள்ளதுடன் 2025.04.23 ஆம் திகதி பத்திரிகைகளினூடாக விலைமனுக்கோரல் அறிவிக்கப்பட்டது. அதற்காக விலைமனுக்கல் கோரி விண்ணப்பித்த 108 பேர் விலைமனுக்கோரல் நிறைவுற்ற 2025.05.15 ஆம் திகதி தங்களது விலைகளை முன்மொழிந்திருந்த நிலையில் 2025.05.15 ஆம் திகதி முற்பகல் 11.00 மணிக்கு விலைமனுக்கோரல் பத்திரங்கள் திறக்கப்பட்ட வாகனங்கள், திறந்த விலைமனுக்கோரல் முறைமைக்கு அமைவாக விற்பனை செய்யப்பட்டன.
அதன்போது, அரசாங்கத்தின் மதிப்பீடுகளை மிஞ்சிய விலைகளை முன்மொழிந்த விலைமனுக்கோரல் விண்ணப்பதாரிகளுக்கு வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டன. சில வாகனங்களுக்கு மதிப்பீடுகளை மிஞ்சிய விலைகள் முன்மொழியப்படாத காரணத்தினால் ஏலமிடப்பட்ட 26 வாகனங்களில் 17 வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டன. அதன்படி அரசாங்கத்தின் மதிப்பீடுகளுக்கு அமைவான பெறுமதிக்கு கோரப்படாத வாகனங்களின் எண்ணிக்கை 09 ஆகும்.
S.No Vehicle No Model Government Valuation (Rs.) Sold Out value (Rs.)
1 CAB-3453 FORD EVEREST- Motor Car 2,500,000.00 5,390,000.00
2 KY-9967 FORD EVEREST – Motor Car 1,900,000.00 8,800,000.00
3 KA-1016 HYUNDAI TERRACAN- Motor Car 3,500,000.00 3,788,999.00
4 CAP-9828 LAND ROVER DISCOVERY 4 S- Motor Car 25,000,000.00 27,100,000.00
5 GP-4599 MITSUBISHI R MONTERO Motor Car 5,000,000.00 8,622,500.00
6 KY-5541 NISSAN TEANA- Motor Car 5,500,000.00 8,195,950.00
7 KD-6376 NISSAN XTRAIL- Motor Car 4,000,000.00 6,127,000.00
8 GD-7249 NISSAN PATROL – Motor Car 13,000,000.00 14,599,900.00
9 GD-7209 NISSAN PATROL Motor Car 11,500,000.00 12,200,000.00
10 KW-6235 PORSCHE CAYENNE S- Motor Car 13,500,000.00 13,610,000.00
11 CAC-4493 SSANG YONG REXTON W- Motor Car 8,300,000.00 9,475,000.00
12 CAC-4502 SSANG YONG REXTON W- Motor Car 8,500,000.00 9,676,000.00
13 KJ-0642 SSANG YONG REXTON270XDI – Motor car 4,000,000.00 5,010,000.00
14 KC-7323 TOYOTA LAND CRUISER SAHARA- Motor Car 6,500,000.00 12,599,900.00
15 KU-7912 TOYOTA LANDCRUISER V8 Motor Car 28,000,000.00 32,150,650.00
16 61-0520 MITSUBISHI ROSA – Motor Coach 2,200,000.00 4,167,350.00
17 KW-5401 LAND ROVER DISCOVERY – Motor Car 13,000,000.00 18,675,000.00
Total 155,900,000.00 200,188,249.00
அரசாங்கத்தின் மதிப்பீடு பெறுமதி கிடைக்காமையினால் விற்பனை செய்யப்படாத 09 வாகனங்களின் விபரம் வருமாறு,
வாகன இலக்கம் வகை முன்மொழியப்பட்ட அதிக பெறுமதி (ரூபாய்)
KQ-9351 B.M.W 523 I-Motor Car 13,888,888.88
GD-7215 NISSAN PATROL – Motor Car 11,375,700.00
KJ-0645 SSANG YONG REXTON 270XDI- Motor Car 6,160,000.00
CAG-4007 SSANG YONG REXTON 270XDI -Motor Car 6,888,999.00
CAF-2536 TOYOTA LAND CRUISER V8 – Motor Car 53,500,000.00
KQ-7546 TOYOTA LAND CRUISER V8 – Motor Car 36,100,000.00
KP-2222 TOYOTA LAND CRUISER V8 – Motor Car 23,266,321.00
KQ-6211 TOYOTA LAND CRUISER V8 – Motor Car 38,888,888.88
KP-7149 TOYOTA LAND CRUISER V8 – Motor Car 34,150,700.00
இவ்வாறிருக்கையில் விலைமனுக் கோரல் முறைமையின் வாகன விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில் பொய்யான செய்திகளை உருவாக்கி அவற்றை ஊடகங்களின் பிரசித்தப்படுத்த சிலர் திட்டமிட்டு செயற்படுவதாக தெரியவருகிறது.
கடந்த கால ஆட்சிகளுக்குள் மக்கள் பணத்தில் கொள்வனவு செய்யப்பட்ட இந்த சொகுசு வாகனங்களை மக்கள் பணத்தில் பராமரித்து அவற்றை பயன்படுத்திய மற்றும் வீணடித்து சிதையும் நிலைக்கு உள்ளாக்கிய மோசடிக் குழுக்கள் தங்களது, வரப்பிரசாதங்களை இழந்திருக்கும் நிலையில், குழப்பத்திற்கு ஆளாகியுள்ளனர் என்பது இதனால் தெரிகிறது. அவர்கள் தங்களது ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் போலிப் பிரசாரம் செய்வோரை பயன்படுத்தி தங்கள் கைகளில் கிடைக்கின்ற எந்தவொரு விடயத்தையும் அரசாங்கத்தை அவதூறு செய்வதற்காக பயன்படுத்திக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த நிலைக்கு மத்தியில் போலி பத்திரிகை செய்தியிடல் மற்றும் உண்மைக்கு புறம்பான சமூக ஊடக செயல்பாடுகள் புறக்கணிக்கப்பட வேண்டிவை என்பதோடு, இவ்வாறான விரோதத்துடன் கூடிய பிரசாரங்களைச் செய்து மக்களை திசைத்திருப்ப முயற்சிக்கின்றமைக்கு எதிராக தற்போதும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment