அண்மையில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்குள் ஏற்பட்ட அமைதியற்ற சம்பவம் தொடர்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தொடர்பில் எடுக்கப்படும் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்று சட்ட மா அதிபரின் ஆலோசனை பெற்று அறிக்கை சமர்பிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு அழைக்கப்பட்டது.
இதன்போது அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தாக்குதல் நடத்தியதாக முறைப்பாட்டாளர் வாக்குமூலம் வழங்கியுள்ள போதிலும், சிசிடிவி காட்சிகளில் அதுபோன்ற எந்த சம்பவங்களும் பதிவாகியில்லை என்று குற்றப் புலனாய்வு பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்தனர்.
இந்நிலையில் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தொடர்பில் எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பில் சட்ட மா அதிபரிடம் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்தனர்.
இதனையடுத்து வழக்கை எதிர்வரும் மார்ச் மாதம் 01ம் திகதிக்கு ஒத்திவைத்த நீதவான் அன்றைய தினம் சட்ட மா அதிபரின் நிலைப்பாடு தொடர்பில் விளக்கமளிக்குமாறு குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment