தொற்றா நோய்களை கட்டுப்படுத்தும் நோக்கில் மென்பானங்களுக்காக அறிமுகம் செய்யப்பட்ட வர்ண குறியீட்டு முறை நேற்று தொடக்கம் திண்ம உணவுப் பொருட்களுக்கும் விஸ்தரிக்கப்படுவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
சீனி, உப்பு, எண்ணெய் செறிந்த உணவுப் பொருட்களை அதிகமாக உட்கொள்வதன் மூலம் மக்கள் தொற்றா நோய்களுக்கு உள்ளாகும் போக்கும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனை கவனத்தில் கொண்டு சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன மென்பான போத்தல்களுக்கான வர்ண குறியீட்டு முறையை அறிமுகம் செய்தார். இது 2017ம் ஆண்டு தொடக்கம் அமுலில் உள்ளது.
இதன் பிரகாரம் ஆகக் கூடுதலான சீனி அடங்கியுள்ள உணவுப் பொருட்களுடன் தொடர்புடைய லேபிள்களில் சிவப்பு நிறக் குறியீடு இடம்பெறும். இலங்கையின் உணவுச் சட்டத்திற்கு அமைய இந்த வர்ண குறியீட்டு முறை நேற்று அமுல் நடப்பட்டுள்ளது.
அரச தகவல் திணைக்களம்
No comments:
Post a Comment