ஹெரோயின் போதை பொருளுடன் 06 பேர் கைது - 14 கையடக்க தொலைபேசிகளும் மீட்பு - News View

About Us

About Us

Breaking

Friday, February 1, 2019

ஹெரோயின் போதை பொருளுடன் 06 பேர் கைது - 14 கையடக்க தொலைபேசிகளும் மீட்பு

வவுனியா - புதூர் ரயில் வீதிக்கு அருகில் துப்பாக்கி, ரவைகள் மற்றும் கைக்குண்டுகளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு உதவி புரிந்த மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீரிகம மற்றும் வெயாங்கொடை பகுதிகளிலேயே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தன​ர்.

புதூரில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கிடைத்த தகவலுக்கு அமைய 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து 14 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 402 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட ஹெரோயினின் பெறுமதி 50 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமென மதிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் வவுனியா, இராஜகிரிய , மீரிகம, மற்றும் வெயாங்கொடை பகுதிகளைச் சேர்ந்த 26 முதல் 45 வயதிற்கு இடைப்பட்டவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

6 சந்தேகநபர்களையும் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment