கொழும்பில் பல பகுதிகளில் நீர் வெட்டு - News View

About Us

About Us

Breaking

Thursday, February 28, 2019

கொழும்பில் பல பகுதிகளில் நீர் வெட்டு

அவசர திருத்த வேலை காரணமாக கொழும்பின் பல பகுதிகளில் சனிக்கிழமை (02) இரவு 9.00 மணி முதல் ஞாயிறு (03) பிற்பகல் 3.00 மணிவரை நீர் விநியோகம் தடைப்படுமென தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

அதற்கமைய கொட்டாஞ்சேனை, கிராண்ட்பாஸ். மட்டக்குளி (கொழும்பு 13,14,15) ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுலில் இருக்குமென சபை அறிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதியில் கொழும்பு கோட்டை மற்றும் புறக்கோட்டை ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குடிநீர் விநியோகத் திட்டம் மற்றும் கழிவுநீர் செயற்றிட்டம் ஆகியவற்றில் முன்னெடுக்கப்படும் திருத்தப்பணிகள் காரணமாக நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment