தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹம்மட் முஸம்மில் குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் (CID) முன்னிலையாகியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இந்திய நாட்டவர் வழங்கிய தகவலுக்கு அமைய, வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த சம்பவம் தொடர்பில் நேற்று (28) முற்பகல் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவிடம் 3 மணி நேர வாக்குமூலம் பெறப்பட்டதோடு, பிற்பகல் அளவில் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவிடமும் வாக்குமூலம் பெறப்பட்டது.
கொழும்பு கோட்டை நீதிமன்றில் இடம்பெற்று வரும் வழக்கு விசாரணைகளுக்கு அமைய, பாராளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஷ, விமல் வீரவன்ச மற்றும் மற்றும் அவரது மனைவி சஷி வீரவங்ச உள்ளிட்டோரிடம் வாக்குமூலம் பெறுவதற்கு CID யினர் அனுமதியை கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment