படைப்புழு தாக்கம் - பாதிப்புற்ற விவசாயிகளுக்கு அரசாங்கம் நிதியுதவி - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 29, 2019

படைப்புழு தாக்கம் - பாதிப்புற்ற விவசாயிகளுக்கு அரசாங்கம் நிதியுதவி

250 மில்லியனுக்கு குறையாத தொகையொன்றை படைப்புழுவினால் பாதிப்புற்ற விவசாயிகளுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக விவசாய அமைச்சர் பி. ஹரிசன் தெரிவித்தார். 

அநுராதபுரத்தில் படைப்புழுவினால் பாதிக்கப்பட்ட விவசாயக் காணிகளைப் பார்வையிடச் சென்ற அமைச்சர், அங்கு பாதிப்புற்ற விவசாயிகள் மத்தியில் கலந்துரையாடும் போது இவ்வாறு தெரிவித்துள்ளார். 

படைப்புழுவினால் பாதிக்கப்பட்ட அனைத்து பிரதேசங்களையும் கண்காணிப்பதற்காக விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். இந்த மதிப்பீடுகளையடுத்து பாதிக்கப்பட்ட ஒரு ஹெக்டயர் பயிர்ச்செய்கை நிலத்துக்காக 40,000 ரூபாவை அரசாங்கம் வழங்கத் தீர்மானித்துள்ளது. 

சோளப் பயிர்ச் செய்கை பெரும்போகத்திற்கு முன்பதாக மேற்கொள்ள வேண்டாமென விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. படைப்புழுக்கள் பெருக்கத்தினால் சோளப் பயிர் பாதிக்கப்படலாம் என்பதால் அதிகாரிகள் மூலம் விவசாயிகளுக்கு நாம் அவ்வாறு அறிவுறுத்தியுள்ளோம்.

No comments:

Post a Comment