யாழ்.பல்கலைகழக மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 29, 2019

யாழ்.பல்கலைகழக மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட 2 ம் வருட மாணவி அவரது வீட்டு முற்றத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

இன்று அதிகாலை 5.00 மணியளவில் நுணாவில் மேற்கு சாவகச்சேரியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சிறீதரன் கோகிலமதி என்ற 22 வயதுடைய பல்கலைக்கழக மாணவியியே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

இச்சம்பவம் தொடர்பாக ஆரம்பக்கட்ட விசாரணைகளை முன்னெடுத்த சாவகச்சேரி பொலிஸார், குறித்த மாணவியின் காதலன் ஒரு மாதத்திற்கு முன்னர் நோய்வாய்ப்பட்ட நிலையில் இறந்துள்ளதாகவும் இதனால் மனவிரக்திக்கு உள்ளாகியிருந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர். 

மாணவியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

யாழ். பிரதீபன்

No comments:

Post a Comment