தெஹிவளை பிரதேசத்தில் நபர் ஒருவர் தனது துப்பாக்கியால் தன்னைத் தானெ சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இன்று காலை இது சம்பந்தமாக தெஹிவளை பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.
64 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதுடன், தனிப்பட்ட காரணங்களாலே அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் தொடர்பில் நீதவான் விசாரணை இடம்பெற்றுள்ளதுடன், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைவிரல் அடையாளங்களை பதிவு செய்துகொள்ளப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தெஹிவளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
No comments:
Post a Comment