கிண்ணியா கங்கைப் பால கீரைத் தீவு பகுதியில் மண் அகழ்வில் ஈடுபட்ட இரு இளைஞர்கள் மீது துப்பாக்கி சூடு நடாத்தப்பட்டதால் இரு இளைஞர்களை காணவில்லை என கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, மண் அகழ்வில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது துப்பாக்கி சூடு நடாத்தப்பட்டதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். மண் அகழ்வுப் பணியில் ஈடுபட்டு வந்த மூவரில் இருவர் கடலில் துப்பாக்கிச் சூட்டு நடாத்தப்பட்டதனால் கடலில் பாய்ந்து மூழ்கியுள்ளனர் இதில் ஒருவர் தப்பித்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
காணாமல் போன இரு இளைஞர்களும் கிண்ணியா இடிமன் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவருகிறது. காணாமல் போனவர்களை தேடும் பணியில் பொது மக்களுடன் சேர்ந்து கடற்படையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் கிண்ணியா பொலிஸார் மேலதிக விசாரனைகளை முன்னெடுத்து வருகின்றனர். குறித்த சம்பவ இடத்துக்கு பொலிஸார் உட்பட முப்படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அங்கிருந்த தப்பிச் சென்றவர்கள் இருவரும் கடலில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவ இடத்துக்கு கிழக்கு மாகாண ஆளுநர், துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ருப் மற்றும் அவரின் பிரத்தியேகச் செயலாளர் டாக்டர் ஹில்மி முகைதீன் பாவா, கிழக்கு மாகணத்திற்கு பொறுப்பான பொலிஸ் மா அதிபர் உள்ளிட்டோர் உடனடி விஜயம் செய்து குறித்த சம்பவம் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறும் துப்பாக்கி சூட்டு நடத்திய படை அதிகாரிக்கு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், காணாமல் போனோரை மீட்கும் நடவடிக்கை எடுக்குமாறும் அறிவித்துள்ளனர்.
இவ்வாறான செயற்பாடுகளை இனிவரும் காலங்களில் இடம்பெறா வண்ணம் கலந்துரையாடலுக்கு உரிய அதிகாரிகளுக்கு அழைப்பு விடுப்பு போன்ற செயற்பாடுகளுக்காக அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment