அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக இலங்கை நிர்வாக சேவை சிரேஷ்ட உத்தியோகத்தரும் நீதி அமைச்சின் மேலதிக செயலாளருமான ஏ. மன்சூரை நியமிப்பதற்கு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் நடவடிக்கை எடுத்துவருகின்றார்.
நிர்வாக சேவை சிரேஷ்ட உத்தியோகத்தர் மன்சூர் மேலதிக அரசாங்க அதிபராக நியமிக்கப்பட வேண்டுமென்பதற்கான சிபாரிசினை இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் தனது அமைச்சரான வஜிர அபேவர்தனவிடம் வழங்கியிருந்தார்.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் ஒருவர் மேலதிக அரசாங்க அதிபராக நியமிக்கப்பட வேண்டுமென்பதற்கான வேண்டுகோளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் ஆகியோர் உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தனவிடம் விடுத்திருந்தனர்.
தற்போது இதற்கான தீவிர நடவடிக்கையினை இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் முன்னெடுத்து வருகின்றார். அந்தவகையில் தனது அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி மற்றும் அமைச்சர் வஜிர அபேவர்தன ஆகியோரிடம் இந்நியமனத்தை விரைவுபடுத்துமாறு வேண்டியுள்ளார்.
ஊடகப் பிரிவு
No comments:
Post a Comment