தங்காலையில் அரசாங்கத்துக்கு எதிரான நீதிக்கான யாத்திரை - News View

About Us

About Us

Breaking

Saturday, December 1, 2018

தங்காலையில் அரசாங்கத்துக்கு எதிரான நீதிக்கான யாத்திரை

அரசாங்கத்தின் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்பட்டுள்ள, ஐக்கிய தேசிய கட்சியின் நீதிக்கான யாத்திரை தங்காலையில் இன்று (02) ஆரம்பமாகவுள்ளது.

தங்காலையில் ஆரம்பமாகவுள்ள குறித்த யாத்திரை கதிர்காமம், மொனராகலை ஊடாக மஹியங்கனையை சென்றடையவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை கொழும்பு, விகாரமஹாதேவி முன்பாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று ஆரம்பமான பேரணி தெவுந்தரையில் நிறைவடைந்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை நியமனம் செய்து நாட்டில் ஆட்சி நடத்துகின்றமை அரசியலமைப்புக்கு முரணானதும் ஜனநாயகத்துக்கு விரோதமானமென ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஏனைய சில கட்சிகள் தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வருகின்றன.

இந்நிலையில் அவ்விடயத்தில் சரியான தீர்வை ஜனாதிபதி மீண்டும் முன்வைக்க வேண்டுமென வலியுறுத்தி நீதிக்கான யாத்திரையை ஆரம்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment