அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் சீரானமுறையில் இடம் பெறுகின்றன - சுசில் பி​ரேம ஜயந்த - News View

About Us

About Us

Breaking

Saturday, December 1, 2018

அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் சீரானமுறையில் இடம் பெறுகின்றன - சுசில் பி​ரேம ஜயந்த

அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் சீரான முறையில் இடம் பெற்றுவருவதாக அமைச்சர் சுசில் பி​ரேம ஜயந்த தெரிவித்தார். தேசிய சுதந்திர முன்னணி மஹரகமவில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் அமைச்சர் உரையாற்றினார். 

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் மூன்றாவது தடவையாக எரிபொருளின் விலை குறைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அங்கு சுட்டிக்காட்டினார். 

ஐக்கிய தேசியக்கட்சியினர் கதிர்காமம் வரை பாதயாத்திரை செல்வதாக தெரிவித்துள்ளனர். அவர்களின் கோரிக்கையை கடவுள் கூட ஏற்றுக்கொள்ளமாட்டார் என்றும் அமைச்சர் சுசில் பி​ரேம ஜயந்த மேலும் தெரிவித்தார். 

இங்கு உரையாற்றிய அமைச்சர் பந்துல குணவர்த்தன ஜனாதிபதி அமைத்த அரசாங்கம் மீண்டும் ஒருபோதும் திருப்பி வழங்கப்படமாட்டாது என்று தெரிவித்தார். 

அமைச்சர் விமல் வீரவன்ச உரையாற்றுகையில், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான இணக்கப்பாடு தற்போது அம்பலத்திற்கு வந்திருப்பதாக சுட்டிக்காட்டினார். 

இந்த மாதம் தமிழ் தேசியக்கூட்டமைப்பினருக்கு சமஷ்டி ஆட்சிக்கான அனுமதியைத்தருவதாக ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்ததாக அவர் குறிப்பிட்டார். இதன் அடிப்படையிலேயே அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்குச் சார்பாக செயற்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment