பிரதமர் பதவிக்கு ரணில் விக்ரமசிங்கவின் பெயரை, முன்மொழிவதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் கபீர் காசிம் நேற்று (சனிக்கிழமை) இது தொடர்பாக அதிகாரபூர்வ கடிதங்களை, ஜனாதிபதிக்கும், எதிர்க்கட்சித் தலைவருக்கும் அனுப்பி வைத்துள்ளார்.
அக்கடிதத்தில் “பிரதமர் பதவிக்காக, ரணில் விக்ரமசிங்கவின் பெயரை ஐக்கிய தேசியக் கட்சி முன்மொழிவதாக, இந்தக் கடிதம் மூலம், உங்களுக்கு அறியத் தருகிறேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment