நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதினூடாகத்தான் எமது கல்குடா தொகுதியின் அரசியல் பிரதிநிதித்துவத்தைப் தக்கவைத்துக் கொள்ள முடியும் என்று மீராவோடை மேற்கு வட்டாரக் குழுத் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவர்களின் இணைப்பாளருமான ஐ.எம்.றிஸ்வின் தெரிவித்தார்.
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட மீராவோடை மேற்கு - 5 ஆம் வட்டாரத்தில் அமைந்துள்ள ஆற்றங்கரைக்கு தடுப்புச் சுவர் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (01) சனிக்கிழமை இடம்பெற்றது இந்நிகழ்வில் தலைமைதாங்கி பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எமது பிரதேசத்திற்கு ஒரு பலமிக்க, தைரியமிக்க அரசியல் பிரதிநிதித்துவம் தேவை என்பதற்காகத்தான் நாங்கள் பாடுபட்டுக் கொன்டிருக்கின்றோம்.
அந்தவகையில் எதிர்வரும் காலங்களில் நாங்கள் ஒட்டுமொத்தமாக எமது கல்குடா மண்ணின் மைந்தன் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவர்களின் அரசியல் அதிகாரத்தைப் பலப்படுத்தி ஒருமித்த கருத்தோடு நாங்கள் செயற்படுவோமாகவிருந்தால் இன்ஷா அல்லாஹ் நாங்கள் இலகுவான வெற்றிகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
அந்தவகையில் எம்முடைய ஒவ்வொரு செயற்பாடுகளும் எங்களுடைய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியையும், எங்களுடைய முன்னாள் பிரதியமைச்சர் எம்.ஸ்.எஸ்.அமீர் அலி அவர்களையும் வளர்க்கின்ற தேவைப்பாடுகளாக இருக்கின்றது எனத் தெரிவித்ததோடு அல்லாஹ்வின் உதவியோடு என்றும் அமீர் அலி அவர்கள் அமைச்சராக இப் பிரதேசத்தில் வளம்வருவார் என்றும் ஐ.எம்.றிஸ்வின் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
எச்.எம்.எம்.பர்ஸான்
No comments:
Post a Comment