புதிய காத்தான்குடி ஹிஸ்புழ்ழாஹ் கிட்ஸ் பாலர் பாடசாலையின் 2018 பாலர் கலை விழா ஞாயிற்றுக்கிழமை (2) பாடசாலை தலைவர் எம்.எஸ்.எம்.மொஹிதீன் சாலி தலைமையில் காத்தான்குடி ஹிஸ்புழ்ழாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.
பாலர்களின் கலை நிகழ்வுகளுடன் சிறப்புற்ற இந் நிகழ்வில் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கலாநிதி எல்.எல்.ஏ.எம்.ஹிஸ்புழ்ழாஹ் பிரதம அதிதியாக கலந்துகொண்டு மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
எம்.பஹ்த் ஜுனைட்
No comments:
Post a Comment