மட்டு மாவட்டத்தின், வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீராவோடை - 4 ஆம் வட்டாரம் ஹமீட் சேர்மன் குறுக்கு வீதியைச் சேர்ந்த எம்.பீ.சூரத்தும்மா (வயது 54) என்பவர் மோட்டார் சைக்கிள் விபத்தில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (02) ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் தெரியவருவதாவது, அட்டாளைச்சேனை ஷர்கியா அரபுக் கல்லூரியில் கல்வி கற்றுவரும் தனது பேரப் பிள்ளையின் பெற்றார் கூட்டத்திற்கு நேற்று 1 ஆம் திகதி சனிக்கிழமை சூரத்தும்மா என்பவர் சென்றிருந்தார் அப்போது மத்ரஸாவில் சிறிது ஒய்வு நேரம் வழங்கப்பட்டுள்ளது.
அவ்வேளையில் அஸர் தொழுகைய நிறைவேற்ற வீதியைக் குறுக்கருக்கும் போது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் குறித்த பெண்ணில் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எச்.எம்.எம்.பர்ஸான்
No comments:
Post a Comment