எதிர்ப்பு பேரணிக்கு தயாராக இருந்த பஸ் மீது தாக்குதல் - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 5, 2018

எதிர்ப்பு பேரணிக்கு தயாராக இருந்த பஸ் மீது தாக்குதல்

கூட்டு எதிர்க்கட்சியினர் ஒழுங்கு செய்துள்ள "மக்கள் பலம் கொழும்புக்கு" எதிர்ப்பு பேரணியில் கலந்து கொள்வதற்கு தயாராக இருந்த பஸ் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

இன்று (05) அதிகாலை 05.45 மணியளவில் ஹாலிஎல - போகமதின்ன பிரதேசத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் கூறியுள்ளார். 

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேராவின் ஆதரவாளர்கள் இந்த பஸ்ஸ் ஏற்றப்பட்டுள்ளதுடன், இதன்போது இலக்கத்தகடு அற்ற கெப் ரக வாகனம் ஒன்றில் வந்த குழு இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் ஹாலிஎல பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

No comments:

Post a Comment