´மக்கள் பலம் கொழும்பிற்கு´ ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக தற்போது பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸார் மற்றும் தண்ணீர் பவுஸர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் காலி முகத்திடலிலும் பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும் தற்போது ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக அமைதியான சூழ்நிலை நிலவுகின்றது.

No comments:
Post a Comment