கொழும்பில் மஹிந்தவின் ஆதரவாளர்கள் குழுவொன்றின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமையினால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. கடவத்தை பிரதேசத்தில் பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொழும்பில் இன்று (05) நடத்தப்படவுள்ள ஜனபலய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கொடி கட்டியவர்கள் மீதே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதலில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர் உட்பட உறுப்பினர் குழுவொன்று இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment