கொழும்பு மாநகர சபைக்குச் சொந்தமான அனைத்து விளையாட்டு மைதானங்களும் மே தின கூட்டம் தவிர்ந்த வேறு எந்தக் கூட்டத்திற்கும் வழங்கப்படமாட்டாது என மாநகர சபை பிரதி முதல்வர் எம். பி. எம். இக்பால் தெரிவித்தார்.
இது தொடர்பில் கொழும்பு மாநகர சபை கொள்கை ரீதியான தீர்மானமொன்றை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கூட்டு எதிரணி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இன்று கொழும்பில் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் பேரணியொன்றை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளது.
இந்த கூட்டத்திற்காக எந்தவொரு விளையாட்டு மைதானத்தையும் வழங்காமலிருப்பதற்கு கொழும்பு மாநகர சபை நடவடிக்கை எடுத்து வருவதாக கூட்டு எதிரணியின் உறுப்பினர்கள் சிலர் விமர்சனங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே மாநகர சபையின் தீர்மானத்தை பிரதி முதல்வர் தெளிவுபடுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment