துப்பாக்கிசூட்டு காயங்களுடன் யானையின் சடலம் கண்டுபிடிப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 5, 2018

துப்பாக்கிசூட்டு காயங்களுடன் யானையின் சடலம் கண்டுபிடிப்பு

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த காட்டு யானை ஒன்றின் சடலம் கஹடகஸ்திகிலிய, பம்ரகெல கிராமத்திற்கு அருகில் தோட்டம் ஒன்றில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இந்த காட்டு யானை செய்கை நிலத்தில் விழுந்து கிடந்ததை கண்ட கிராமவாசி ஒருவர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸாரால் அநுராதபுரம் வனஜீவராசிகள் அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியதன் பின்னர் வனஜீவராசிகள் அதிகாரிகள் குழுவொன்று வந்து உயிரிழந்த யானையை மீட்டுள்ளது.

இந்த காட்டு யானை மூன்று நாட்களுக்கு முன்னர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் வௌியிடப்பட்டுள்ளது.

சுமார் 25 வயதுடைய நான்கரை அடி உயரம் கொண்ட காட்டு யானையே உயிரிழந்துள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment