முச்சக்கர வண்டிகளுக்கு ஒக்டோபர் முதல் மீட்டர் பொருத்துவது கட்டாயம் : மீறினால் கைது அல்லது அபராதம் - News View

About Us

About Us

Breaking

Saturday, September 29, 2018

முச்சக்கர வண்டிகளுக்கு ஒக்டோபர் முதல் மீட்டர் பொருத்துவது கட்டாயம் : மீறினால் கைது அல்லது அபராதம்

பயணிகள் முச்சக்கர வண்டிகளுக்கு, கட்டண அறவீட்டு மீட்டர் பொருத்துவது, ஒக்டோபர் மாதம் முதல் கட்டாய நடைமுறைக்குக் கொண்டு வரத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, வீதிப் பாதுகாப்பு சம்பந்தமான தேசிய சபை அறிவித்துள்ளது. 

குறித்த சட்டம், ஒக்டோபர் மாதம் இரண்டாம் வாரம் முதல் அமுலுக்குக் கொண்டு வரப்படும் என்று, வீதிப் பாதுகாப்பு சம்பந்தமான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார். 

மீட்டர் பொருத்துவதற்காக, சாரதிகளுக்கு நீண்ட காலம் அவகாசம் வழங்கப்பட்டதாகவும், இவ்வாறு வழங்கப்பட்டிருந்த சலுகைக் காலத்தை மேலும் நீடிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இந்தச் சட்டத்தை மீறும் முச்சக்கர வண்டிச் சாரதிகளைக் கைது செய்வதற்கு அல்லது அபராதம் விதிப்பதற்கு, பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதாகவும், வீதிப் பாதுகாப்பு சம்பந்தமான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். 

இதேவேளை, முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண அறவீட்டு மீட்டர் பொருத்துவது தவிர, பயணிகளுக்கு பற்றுச்சீட்டு வழங்கும் சட்டமும் நடைமுறைக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஐ. ஏ. காதிர் கான் 

No comments:

Post a Comment