புல்மோட்டை பிக்குவினால் 13ம் கட்டை காணி பிரச்சினை : முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மற்றும் அரசாங்க அதிபர் சம்பவ இடத்திற்கு விஜயம் - News View

About Us

About Us

Breaking

Saturday, September 29, 2018

புல்மோட்டை பிக்குவினால் 13ம் கட்டை காணி பிரச்சினை : முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மற்றும் அரசாங்க அதிபர் சம்பவ இடத்திற்கு விஜயம்



திருகோணமலை மாவட்டத்தின், புல்மோட்டை 13ம் கட்டை குஞ்சுக்குளம் பகுதியில் 1966ம் ஆண்டு காலப்பகுதியில் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டு விவசாயம் மேற்கொண்டு வந்த நிலங்கள் கடந்த முப்பது வருடகால யுத்தத்தின்போது கைவிடப்பட்ட நிலையில் மீண்டும் நாட்டில் சமாதான சூழல் நிலவியுள்ள போதிலும் மீண்டும் மக்கள் தங்களது காணிக்குள் போகமுடியாத நிலை காணப்படுகின்றது. 

இதற்கிடையில் புல்மோட்டை அரிசிமலை பௌத்த பிக்குவினால் கடந்த மாதம் குறித்த பகுதிக்குள் பௌத்த சமய பாடசாலை ஒன்றினை அமைப்பதற்காக கொழும்பு வன பரிபாலன அதிகாரிகளால் வன பரிபாலன திணைக்களத்திற்கு சொந்தமான காணி எனக்கூறி குறித்த பொதுமக்களின் நிலங்களுக்குள் 80 பேஜ் காணிக்கான அனுமதி பத்திர கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் குறிப்பிட்ட காணியில் சட்டவிரோதமான முறையில் டோசர் இயந்திரம் மூலம் காணிகளை துப்பரவு செய்ய முட்பட்ட வேளை காணிக்கு உரித்துடையவர்களால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டது.
அத்துடன், 2018.09.28ம் திகதி - வெள்ளிக்கிழமை (நேற்று) மீண்டும் சட்டவிரோதமான முறையில் இயந்திரத்தை கொண்டு துப்பரவு செய்யப்பட்ட வேளை காணி உரிமையாளர்களினால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதனை கேல்வியுற்ற முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் உள்ளிட்ட உள்ளூர் அரசியல் பிரமுகர்கள், பள்ளிவாயல்களின் தலைவர்கள், பிரதேச வாசிகள் குறித்த பகுதிக்கு சென்று நிலைமைகளை பார்வையிட்டனர்.

இதன்போது, இரு சாராருக்குமிடையில் பதற்றம் ஏற்பட்ட நிலையில் காணி சொந்தக்காரர்களால் தங்களுடைய காணியில் தற்காலிக கொட்டகை அமைத்து இருவுவேளையில் தங்கியிருந்தனர்.

அதிகாலை 3.30 மணியளவில் பௌத்த மதகுருவும், சில பெரும்பான்மையினரும் குறித்த பகுதிக்கு சென்ற வேலை முறுகல் நிலை ஏற்பட்டது. இதன் பின்னர் நிலைமையினை கருத்திற்கொண்டு பொலிஸார் குவிக்கப்பட்டு கலகம் அடக்கும் பொலிஸார் மேலதிகமாக திருகோணமலையில் இருந்து வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.
இதனை கேல்வியுற்ற முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அன்வர், அப்பிரதேச தவிசாளர், முன்னாள் உதவி தவிசாளர் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் சம்பவ இடத்திற்கு சென்றிருந்ததோடு, மாவட்ட அரசாங்க அதிபர், மாவட்ட பொலிஸ் மா அதிபர், குச்சவெளி பிரதேச செயலாளர், பொலிஸ் உயர் அத்தியட்சகர், புல்மோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்டோர் குறித்த பகுதியில் இது விடயமாக அவசர கலந்துரையாடல்களை மேற்கொண்டனர். 

குறித்த கலந்துரையாடலின் பின்னர் இரு சாராரும் அப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டு அரசாங்க அதிபரால் தடை செய்யப்பட்டு பொலிஸ் மாவட்ட பொறுப்பதிகாரிக்கு அப்பகுதிக்குள் முழுமையான பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்க பணிப்புரை வழங்கப்பட்டது.

இது விடயமாக ஜனாதிபதியின் தொழிநுட்ப பகுதிக்கு அழைக்கப்பட்டு ஆராயப்படும் எனவும் இவ்விடயத்தில் நியாயமான தீர்வுகளை பெற்றுத்தருவதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். இதன்போது பொதுமக்கள் அரசாங்க அதிபர் மற்றும் மாவட்ட பொலிஸ் மா அதிபர் ஆகியோரிடம் தொடர்ந்தும் குறித்த பிக்குவினால் கிராமத்தில் இனமுறுகள்களை ஏற்படுத்தி பிரச்சினைகளை உண்டுபன்னும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக சுட்டிக்காட்டினர்.

No comments:

Post a Comment