ஆவா குழுவின் முக்கிய உறுப்பினர் கைது - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 5, 2018

ஆவா குழுவின் முக்கிய உறுப்பினர் கைது

ஆறு மாதமாக யாழ் பொலிசாரால் தேடப்பட்டுவந்த சட்டவிரோத வாள்வெட்டு கொள்ளைக்கும்பலான ஆவா குழுவின் முக்கிய உறுப்பினர் நேற்று (04) மாலை மானிப்பாய் பொலிஸாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். 

கொக்குவில் பகுதியை சேர்ந்த குமாரசாமி நிலோஜன் என்னும் 23 வயதுடைய இந்த நபரை, பொலிஸார் கடந்த ஆறு மாதகாலமாக தேடிவந்ததால் இவர் கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் கடந்த ஆறு மாதங்களாக தலைமறைவாக இருந்துவந்துள்ளார். 

இவர் ஆவா குழுவின் தனுரொக் என்பவருடன் நெருங்கி செயற்பட்டதுடன், யாழ் குடாநாட்டில் இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டு வன்முறை மற்றும் களவுச் சம்பவங்களுடன் தொடர்பு வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

தற்போது கொக்குவிலில் உள்ள தனது காதலியை பார்ப்பதற்கென நேற்று வருகை தந்தபோது மானிப்பாய் பொலிஸாரால் புகையிரத நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். 

இந்நபர் வருவதை இரகசிய தகலொன்றின் மூலம் அறிந்துகொண்ட மனிப்பாய் பொலிஸார் விரைவாக செயற்பட்டு இவரை கைது செய்ததுடன் இவரிடமிருந்து கூரிய ஆயதம் ஒன்றையும் பறிமுதல் செய்துள்ளனர். இவர் இன்று யாழ். மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.

No comments:

Post a Comment