ரிஷாட் பதியுதீனின் சத்தியக்கடதாசியை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தது - News View

About Us

About Us

Breaking

Friday, August 3, 2018

ரிஷாட் பதியுதீனின் சத்தியக்கடதாசியை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தது

வில்பத்து காடழிப்பு தொடர்பான வழக்கிலிருந்து தன்னை விடுவிக்குமாறு, அமைச்சர் ரிஷாத் பதியுதீன் விடுத்த கோரிக்கையை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பிலான மனு, இன்று (03) மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேன மற்றும் அர்ஜுன் ஒபேசேகர ஆகிய நீதிபதிகளின் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அவர்கள் குறித்த தீர்மானத்தை அறிவித்தனர்.

அத்துடன் குறித்த வழக்கை எதிர்வரும் நவம்பர் 12 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளதாக நீதிபதிகள் அறிவித்தனர்.

வில்பத்து, விலத்திகுளம் வனப் பகுதியில் மக்களை குடியேற்றயிதாக தெரிவித்து, அமைச்சர் ரிஷாத்திற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில், அமைச்சர் கருத்துத் தெரிவித்ததாக தெரிவித்து, குறித்த வழக்கை தாக்கல் செய்தவர்களில் ஒருவரான சட்டத்தரணி, நாகானந்த கொடிதுவக்கு மேன்முறையீட்டு நீதிமன்றில் முறையீடொன்றை மேற்கொண்டிருந்தார்.

குறித்த வழக்கு தொடர்பில், கடந்த 1990 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளால், குறித்த பிரதேசம் கைப்பற்றப்படுவதற்கு முன்னர் இருந்து, குறித்த பகுதியில் முஸ்லிம் மக்கள் அப்பகுதியில் வாழ்ந்து வந்ததாக, சத்தியக்கடதாசி மூலம் நீதிமன்றிற்கு அறிவித்திருந்தார்.

ஆயினும், நில அளவையாளரின் அறிக்கைக்கு அமைய, அவ்வாறான மக்கள் குடியிருப்பு ஒன்று இருக்கவில்லை எனவும், அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நீதிமன்றத்தை திசைதிருப்பி, அவமதிப்பதாக தெரிவித்து, வழக்கறிஞர் நாகானந்த கொடிதுவக்கு மற்றுமொரு முறையீடொன்றை மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment