முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களின் வழிகாட்டலின் கீழ் ஏறாவூர் நகரசபை தவிசாளர் I. வாஸித் தலைமையில் ஏறாவூர் பிரதேசத்தில் நேற்று 01.08.2018 பி.ப 04.00 மணியளவில் மர நடுகைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற பாரிய இயக்கமான இக் கட்சியின் ஆல விரூட்சத்தின் விழுதுகளாகவும் கிளைகளாகவும் இந்த நாட்டில் பரந்து விரிந்து வாழும் போராளிகளை கட்சியுடன் இணைக்கும் ஓர் உறவுப் பிணைப்பாக வீட்டுக்கு வீடு மரம் என்ற வேலைத்திட்டம் இன்று நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டு இருக்கின்றது.
இத்திட்டத்தை செயற்படுத்துவதுனூடாக பலம் வாய்ந்த இக் கட்சியினை மென்மேலும் பலப்படுத்தவும் ஆரம்ப கால போராளிகள் உட்பட இளைஞர்கள், இளைஞர் யுவதிகள், தாய்மார்கள் அனைவரையும் இந்த இயக்கத்துடன் ஒன்று சேர்க்கக்கூடிய திட்டமாக இது அமைந்துள்ளது.
இந்நிகழ்ச்சி திட்டத்தில் ஏறாவூர் நகரசபை உறுப்பினரான SMASM. சரூஜ் SM. றியாழ் SM. ஜெமில் மற்றும் விவசாய திணைக்கள அதிகாரி முர்சிதா ஷிரின் உட்பட கட்சியின் போராளிகளும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment