1 டிரில்லியன் அமெரிக்க டொலரை வியாபார உலகில் புதிய உச்சம் தொட்டு சாதித்த ஆப்பிள் - News View

About Us

About Us

Breaking

Thursday, August 2, 2018

1 டிரில்லியன் அமெரிக்க டொலரை வியாபார உலகில் புதிய உச்சம் தொட்டு சாதித்த ஆப்பிள்

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிளின் சந்தை மதிப்பு 1 டிரில்லியன் அமெரிக்க டொலரை தொட்டுள்ளது. வியாபார உலகில் இந்த சாதனையை எட்டும் முதல் நிறுவனம் என்ற பெயரை ஆப்பிள் பெற்றுள்ளது.

உலகின் மிக முக்கியமான தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், நியூயார்க் பங்குச்சந்தையில் ஜூன் காலாண்டில் 11.5 பில்லியன் டாலர் அளவிலான லாபத்தைப் பெற்றிருந்தது. இது மார்ச் காலாண்டை ஒப்பிடுகையில், ஜூன் காலாண்டில் 30 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது. 

அதேபோல் ஆப்பிள் நிறுவனத்தின் வருவாயும் 17 சதவீதம் உயர்ந்து 53.3 பில்லியன் டாலர் வரையில் சென்றது. இன்றைய பங்குச்சந்தை தொடங்கியதும் ஆப்பிளின் சந்தை மதிப்பு எகிறிக்கொண்டே சென்றது. ஒரு கட்டத்தில் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் என்ற உச்சத்தை ஆப்பிள் நிறுவனம் எட்டியது.

இந்த அளவுக்கு ஒரு நிறுவனத்தின் சந்தை மதிப்பு உயர்ந்துள்ளது இதுவே முதன்முறையாகும். கடந்த ஜூன் 30 உடன் முடிந்த காலாண்டில் ஆப்பிள் நிறுவனம் சுமார் 41.3 மில்லியன் ஐபோன்களை விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment