சிறிய நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களுக்கும் வங்கிகளுக்குமிடையிலான என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா கடன் திட்டம் தொடர்பிலான விழிப்புணர்வுக் கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறிகாந்த் தலைமையில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட சிறிய தொழில் முயற்சி அபிவிருத்திப்பிரிவின் ஏற்பாட்டில் இன்று (31) நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் உதவி மாவட்டச் செயலாளர் ஏ.நகேஸ்வரன், சிறிய தொழில் முயற்சி அபிவிருத்திப்பிரிவு மேற்பார்வை உத்தியோகத்தர் எஸ்.வினோத், உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக ரீதியான உத்தியோகத்தர்கள், மாவட்டத்தின் தொழில் முயற்சியாளர்கள் கலந்துகொண்டனர்.
இக்கலந்துரையாடலில் மக்கள் வங்கி, பிரதேச அபிவிருத்தி வங்கி, இலங்கை வங்கி, கொமர்சியல் வங்கி ஆகியவற்றின் முகாமையாளர்கள், பிரதிநிதிகளுக்கிடையில் என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா கடன் திட்டம் தொடர்பிலான விளக்கங்களை வழங்கியதுடன், தொழில் முயற்சியாளர்களின் இக் கடன்திட்டம் மற்றும் செயற்பாடு குறித்த சந்தேகங்களுக்கும் விளக்கமளிக்கப்பட்டது.
அரசாங்கத்தின் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வகையிலான திட்டங்களை உள்ளடக்கிய பொருளாதார அபிவிருத்திக்கான என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா கடன் திட்டமானது அரச வங்கிகளான மக்கள் வங்கி, இலங்கை வங்கி, பிரதேச அபிவிருத்தி வங்கிகளுடாக நாடுமுழுவதும்; நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது .
இந்த என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா கடன் திட்டத்தில் மக்களின் பொருளாதார மேம்பாடு மற்றும் நிதிக் கடன்சுமை என்பவற்றினைக் குறைக்கும் வகையில் அரசாங்கத்தினால் மிகக்குறைந்த கடன் வட்டியிலும், அத்துடன், அரசாங்கம் அதன் வட்டியின் அரைப்பகுதியைச் செலுத்தும் வகையிலும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், ஆலோசனை செயற்திட்டங்கள், மேற்பார்வை முறைமைகள், பயிற்சிகள் வழங்கல் என பல்வேறு படிமுறைகளும் உற்பத்தி மற்றும் தொழில் முனைவோரான மக்களின் வாழ்வாதார பொருளாதார மேம்பாடு கருதி ஏற்பாடுகள் செய்யப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் மக்கள் வங்கியின் எஸ்.தனோஜன், பிரதேச அபிவிருத்தி வங்கியின் மாவட்ட முகாமையாளர் கே.எம்.ஆர்.ரந்தெனியா, மற்றும் பிராந்திய வியாபார அபிவிருத்தி முகாமையாளர் சத்தியநாதன், இலங்கை வங்கி மேற்தரக்கிளை முகாமையாளர் ஏ.பிரதீபன், கொமர்சியல் வங்கியின் முகாமையாளர் ரி.ரஞ்சிதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment