ஆலங்குள மக்களின் நன்மைகருதி இருளைடைந்து காணப்படும் பிரதேசங்களை ஒளியூட்டும் திட்டத்தின் கீழ் கோறளைப்பற்று வடக்கு வாகரைப்பிரதேச சபை உறுப்பினரும், மட்டக்களப்பு பல்கலைக்கழகக் கல்லூரியின் திட்ட முகாமையாளருமான எஸ்.எம்.தாஹீர் அவர்களினால் மின்குமிழ் பொருத்தும் முதற்கட்டப்பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
ஆலங்ககுள ஆலய சபையின் தலைவர் கே.கிருபாகரன் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க மேற்படி மின்குமிழ் பொருத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மிகவும் இருளடைந்த காணப்பட்ட இப்பிரதேசம் மக்கள் போக்குவரத்து செய்வதில் பாரிய அசெளகரியங்களை எதிர்நோக்கி வந்ததுடன், அவசரத் தேவைகளின் நிமித்தம் வெளியில் சென்று வர முடியாத நிலையும் விச ஜந்துக்களின் அச்சுறுத்தலும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி முன்னெடுப்பை உடனடியாக மேற்கொண்ட பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எம்.தாஹீர் அவர்களுக்கு பிரதேச மக்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதோடு, மேலும் இப்பிரதேசத்தில் இருளடைந்து காணப்படும் இடங்களுக்கு மின்குமிழ்களை பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
thehotline.lk
No comments:
Post a Comment