தங்கம் கலந்த மணலை ஏற்றுமதி செய்யும் வர்த்தகம் புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தினால் கண்டு பிடிப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, August 4, 2018

தங்கம் கலந்த மணலை ஏற்றுமதி செய்யும் வர்த்தகம் புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தினால் கண்டு பிடிப்பு

தங்கம் கலந்த மணலை ஏற்றுமதி செய்யும் பாரிய வர்த்தகம் தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளன.

சுங்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 64 மணல் கொள்கலன்களிலுள்ள மணல் மாதிரிகளை சோதனையிட்டபோது, இது குறித்து தெரியவந்துள்ளதாக இலங்கை சுங்கத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

சட்டவிரோதமாகத் தங்கம் கலந்த மணலை ஏற்றுமதி செய்யும் குற்றச்சாட்டின் கீழ், 50 இலட்சம் ரூபா அபராதம் விதித்து, கொள்கலன்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்வதற்குத் தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்த 15 கொள்கலன்கள் சுங்கத்தினால் தடுத்துவைக்கப்பட்டுள்ளன.

புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகத்தினால் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் பின்னரே இவை தடுத்துவைக்கப்பட்டுள்ளன.

சுற்றாடல் மற்றும் மகாவலி அபிவிருத்தி அமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment