முல்லைத்தீவு கடற்பகுதியில் மேற்கொள்ளப்படும் சட்ட விரோத மீன்பிடி தொழில்களை தடுத்து நிறுத்தக் கோரி மாவட்ட கடற்றொழில் நீரியல்வள திணைக்களத்தை முற்றுகையிட்ட பெருந்திரளான மீனவர்கள் நேற்று (02) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் திடீரென அத்துமீறி முல்லைத்தீவு மாவட்ட நீரியல்வள திணைக்களத்துக்குள் நுழைந்ததால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. இதனைக் கட்டுப்படுத்த அதிகளவு பொலிசார் அங்கு குவிக்கப்பட்டனர்.
இதன்போது, ஆர்ப்பாட்டக்காரர்களினால் நீரியல்வளத் திணைக்களத்தின் ஜன்னல் கண்ணாடிகளும் அடித்து உடைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து சட்ட விரோத தொழில்களை தடுத்து நிறுத்தக் கோரி மாவட்ட கடற்தொழில் நீரியல்வள திணைக்களத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன், பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment