வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்று வருவதாக கூறப்படும் குற்றச்செயல்களை கண்காணிப்பதற்கு சிறைச்சாலை தலைமையகத்திலிருந்து கட்டுப்படுத்தும் வகையிலான சீ.சீ.ரீ.வி கமரா கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட உள்ளது.
இதனடிப்படையில் தற்பொழுது சிறைச்சாலையில் காணப்படும் கமராக கட்டமைப்பிற்கு மேலதிகமாக மேலும் கமராக்கள் பொருத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த கமராக்கள் இதுவரையில் வெலிக்கடை சிறைச்சாலையிலேயே கட்டுப்படுத்தப்பட்டு வந்தது. எனினும், இனிவரும் காலங்களில் சிறைச்சாலை தலைமையகத்திலிருந்து இந்த கமரா கட்டமைப்பு கட்டுப்படுத்தப்பட உள்ளது.
இதேவேளை, பாரிய போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய சூசை என்ற நபர் மற்றும் வெலே சுதா என்ற மற்றுமொரு பாரிய போதைப்பொருள் வர்த்தகர் ஆகியோர் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சிறைக்கூடத்திற்கு அருகாமையில் மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment