மட்டக்களப்பு, படுவான்கரை பகுதியில் சட்ட விரோதமான முறையில் ஒரு தொகை மாடுகளை வாகனங்களில் கொண்டு செல்ல முற்பட்ட இருவரை பொலிஸார் கைது செய்ததுடன் மாடுகளையும் கைப்பற்றியுள்ளனர்.
நேற்று (வியாழக்கிழமை) அதிகாலை கொக்கட்டிச்சோலை பகுதிகளில் வைத்து குறித்த மாடுகள் கைப்பற்றப்பட்டதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் இரவு நேரத்தில் அனுமதி பத்திரம் இன்றி மாடுகளைக்கொண்டு சென்றதன் காரணமாகவே கைது செய்ததாகவும் மாடுகளையும் கைப்பற்றியதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இரண்டு சிறிய ரக லொறிகளில் சுமார் 9 மாடுகள் இவ்வாறு கொண்டு செல்லப்பட்ட போது, பொதுமக்களின் உதவியுடன் பிடிக்கப்பட்டதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் முன்னெடுத்த வருவதாக தெரிவித்துள்னர்.
No comments:
Post a Comment