போதைப்பொருள் தொடர்பான தவறுகளுக்கான சட்டம் போதுமானதாக இல்லை - சட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பில் அரசு கவனம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, August 1, 2018

போதைப்பொருள் தொடர்பான தவறுகளுக்கான சட்டம் போதுமானதாக இல்லை - சட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பில் அரசு கவனம்

போதைப்பொருள் தொடர்பான தவறுகளுக்கான சட்டம் போதுமானதாக இல்லை. இதற்காக சட்ட திருத்தம் மேற்கொள்ள வேண்டியுள்ளதோடு பிடிபடும் போதைப்பொருட்களை அழிக்கவும் சட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டியுள்ளதாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். 

அபாயகர ஔடத அதிகார சபையின் பணிகளை மேற்பார்வை செய்வதற்காக அங்கு சென்றிருந்த அமைச்சர் அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் பின்னர் கருத்து வெளியிட்ட போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

எமது நாட்டில் போதைப் பொருளுக்கு அடிமை யானவர்கள் 50 ஆயிரம் பேருக்கும் அதிகமானவர்கள் உள்ளனர். இவர்களின் வருடாந்த போதைப் பொருள் ​தேவை 1000 கிலோவாகும். கொழும்பு 1 முதல் 15 வரையான பிரதேசத்தில் பெருமளவு போதைப் பொருட்கள் பரிமாறப்படுகின்றன. 

இரண்டாமிடத்தை கம்பஹாவும் அடுத்து குருநாகல், அநுராதபுரம் மற்றும் ஊவா மாகாணம் என்பன காணப்படுகின்றன. உலகில் பயன்படுத்தப்படும் சகலவித நவீன போதைப்பொருள் வகைகளும் கடந்தகாலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இதன் போது அதிகாரிகள் குறிப்பிட்டார்கள்.

பிடிபடும் போதைப் பொருட்களுக்கு என்ன செய்வீர்கள் என அமைச்சர் அதிகாரிகளிடம் வினவினார்.குற்றவாளிகள் அடையாளங்காணப்படும் வரை அவை பகுப்பாய்வு திணைக்களத்தில் வைக்கப்படும் என்று குறிப்பிட்ட அதிகாரிகள் , வழக்கு விசாரணை நிறைவடைய 5 முதல் 10 வருடங்கள் வரை செல்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் நீதிமன்ற உத்தரவு கிடைக்கும் வரை அவை தடுத்து வைக்கப்படுவதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் முழுமையாக போதைப் பொருள் பாவனையை ஒழிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. போதைப்பொருள் தொடர்பான தவறுகளுக்கான சட்டம் போதுமானதாக இல்லை.

3 வகையான போதைப்பொருட்கள் குறித்து மாத்திரமே சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் புது வகையான போதைப்பொருட்கள் நாட்டிற்குள் வருகின்றன.

இது தவிர கைது செய்யும் போதைப்பொருட்களை பகுப்பாய்வின் பின்னர் விஞ்ஞானபூர்வமாக அழிப்பதற்கு தேவையான சட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டும். போதைப் பொருள் தொடர்பில் பொலிஸும் நீதிமன்றமும் தௌிவு பெற வேண்டும்.

பிடிபடும் போதைப் பொருட்கள் நீண்ட காலம் குவித்து வைக்கப்படுகிறது. வழக்கு விசாரணை முடிவடையும் வரை அவற்றுக்கு என்ன நடக்கிறது என எவருக்கும் தெரியாது.இருக்கும் சட்டத்தின் பிரகாரம் அவற்றுக்கு எதுவும் செய்ய முடியாது.இது தொடர்பில் சட்ட திருத்தம் மேற்கொள்ள வேண்டும்.

இது தவிர பிடிபடும் நபர்களை சிறையில் தடுத்து வைப்பதால் எதிர்பார்க்கும் தண்டனை கிடைக்கிறதா என்பது சந்தேகம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment