அகில இலங்கை மக்கள் காங்கிரஸை காத்தான்குடியில் காலூன்றச் செய்தவர் கவிஞர் ஜவ்பர்கான் பிரதியமைச்சர் அமீரலி தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 31, 2018

அகில இலங்கை மக்கள் காங்கிரஸை காத்தான்குடியில் காலூன்றச் செய்தவர் கவிஞர் ஜவ்பர்கான் பிரதியமைச்சர் அமீரலி தெரிவிப்பு

காத்தான்குடி மண்ணில் முஸ்லிம் சமுகத்தின் பேசும் குரலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸை காலூன்றச் செய்தவர் கவிஞர் ஜவ்பர்கான். அவரது விடப்பிடியான முயற்சிதான் இம்மண்ணில் இக்கட்சி தேர்தலில் களமிறங்கவும் கருவாய் அமைந்தது. இவ்வாறு அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய தவிசாளரும் பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி குறிப்பிட்டர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் காத்தான்குடி மத்திய குழு அங்குரார்ப்பண வைபவம் கவிஞர் ரீ.எல்.ஜவ்பர்கான் தலைமையில் பிரதியமைச்சர் அமீர் அலி முன்னிலையில் காத்தான்குடி சலாகா பலசில் நேற்று (30) திங்கட்கிழமை இரவு நடைபெற்றது.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் காத்தான்குடி நகர சபையில் வேறு ஒரு சின்னத்தில் எமது கட்சி போட்டியிடுவதென்ற தீர்மானம் இருந்த போதிலும் மயில் சின்னத்தை தாருங்கள் ஒரு ஆசனத்தை பெற்றுத் தருகின்றேன் என ஜவ்பர்கான் கட்சியை காத்தான்குடிக்கு எடுத்துச் சென்றார். அதனால்தான் இம்மண்ணில் மக்கள் காங்கிரஸ் இம்மண்ணில் போட்டியிட்டது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முஸ்லிம் சமுகத்தின் உரிமைக்குரல். பல்வேறு நெருக்குவாரங்களுக்கு உள்னாகியுள்ள முஸ்லிம் சமுகத்திற்கு பேசுவதற்காக ஒரு கட்சி தேவை அதைத்தான் மக்கள் காங்கிரஸ் செய்கிறது.என்றார்.

எம்.எஸ்.எம்.நூர்தீன்

No comments:

Post a Comment