கிண்ணியா தள வைத்தியசாலையில் வெளிநோயாளர் சேவை நேரம் மாலை 6.00 மணி வரை நீடிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 31, 2018

கிண்ணியா தள வைத்தியசாலையில் வெளிநோயாளர் சேவை நேரம் மாலை 6.00 மணி வரை நீடிப்பு

கிண்ணியா தள வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு மாலை 6.00 மணி வரை இயங்கும் எனவும் இதன் ஊடாக மக்கள் தங்களது மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்ய முடியும் என வைத்தியசாலையின் வைத்திய அத்தியகட்சகர் டாக்டர் பீ.சதீஸ் குமார் நேற்று (31) தெரிவித்தார்.

மக்களின் கோரிக்கைக்கு அமையவும் நீண்ட நாட்கள் மேற்கொண்ட தனது முயற்சியின் பயனாக வெளிநோயாளர் பிரிவு நேரம் அதிகரிக்கப்பட்டு மக்களின் நலனுக் காக இவ்வாறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் கூறினார்.

இதனால் கிண்ணியா உள்ளிட்ட தூர பிரதேசங்களில் இருந்து வரும் மக்களும் நன்மை அடைவர் .சீனக்குடா,வான்எல, ஆயிலியடி,வெள்ளைமணல் போன்ற மக்களும் இலகுவாக தங்களது மருத்துவ வசதிகளை நேர அதிகரிப்பின் பின்னர் பூர்த்தி செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

இதேவேளை கிண்ணியா தள வைத்தியசாலையில் கடமையாற்றி வந்த விசேட வைத்திய நிபுணர் கற்கை நெறிக்காக வெளிநாடு சென்று விட்டதால் மாற்று ஏற்பாடுகள் செய்யப்படாததால் தாம் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக நோயாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேபோன்று மயக்க மருந்து வழங்கும் விசேட வைத்தியரும் மாற்று ஏற்பாடின்றி இடமாற்றம் பெற்று சென்றுள்ளார். இதனால் பல வைத்திய சேவைகளை கிண்ணியா மக்கள் இழக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment