உடன் அமுலுக்கு வரும் வகையில் 25 மருந்து வகைகளின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
புற்று நோய்க்கான 10 வகையான மருந்துகள் மற்றும் 15 வகையான விலை உயர்ந்த மருந்துகளுக்கான விலைகளே இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இதன்படி ஆண்டிபயடிக், நீரிழிவுக்கான மருந்து வகை மற்றும் அதற்கான உபகரணங்கள், ஆஸ்துமா, வலி நிவாரணி உட்பட சில விலை உயர்ந்த மருந்துகளுக்கான விலைகள் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தாமரை தடாகத்தில் இன்று (31) நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் ராஜித சேனாரத்ன இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment