பேருந்து மரம் ஒன்றுடன் மோதிய விபத்தில் 19 பேர் காயம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 25, 2018

பேருந்து மரம் ஒன்றுடன் மோதிய விபத்தில் 19 பேர் காயம்

கொழும்பில் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்று மதவாச்சி, பூனேவ இராணுவ முகாமிற்கு அருகில் பாதையை விட்டு விலகி மரம் ஒன்றுடன் மோதியதில் இடம்பெற்ற விபத்தில் 19 பேர் காயமடைந்துள்ளனர். 

இன்று (25) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பேருந்து ஓட்டுனருக்கு நித்திரை ஏற்பட்டதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 
விபத்தில் காயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

விபத்தில் பலர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன் விபத்தில் பேருந்தின் மேல் பகுதி கழன்று சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் மதவாச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment