டுபாயில் நடைபெறவுள்ள டி10 கிரிக்கெட்டில் ரஷித் கான் - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 25, 2018

டுபாயில் நடைபெறவுள்ள டி10 கிரிக்கெட்டில் ரஷித் கான்

டுபாயில் நடைபெறவுள்ள 10 ஓவர் லீக் தொடரில் ரஷித் கான், அன்ட்ரே ரஸல், மெக்கல்லம் ஆகிய முன்னணி வீரர்கள் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளனர்.

டி20 பாணியில் டி10 கிரிக்கெட் தொடர் கடந்த ஆண்டு டுபாயில் நடைபெற்றது. இதில் நான்கு அணிகள் கலந்து கொண்டன. இந்த ஆண்டும் 10 ஓவர் லீக் தொடர் வரும் டிசம்பர் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் கூடுதலாக இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் டி20 கிரிக்கெட்டின் சிறந்த வீரர்களான ரஷித் கான், அன்ட்ரே ரஸல் இதில் பங்கேற்கின்றனர்.

ரஷித் கான் மாரத்தா அரேபியன்ஸ் அணியில் இணைந்துள்ளார். முஜீப் உர் ரஹ்மானை பெங்கால் டைகர்ஸ் அணி எடுத்துள்ளது. ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த முகமது ஷேசாத்தை புதிய அணியான கிறிஸ்டெனட் ராஜ்புத்ஸ் அணியும், அயர்லாந்தின் போல் ஸ்டிர்லிங்கை கேரளா கிங்ஸ் அணியும் ஏலம் எடுத்துள்ளது.

பஞ்சாபி லெஜெண்ட்ஸ் சொஹைப் மாலிக்கை தக்கவைத்துள்ளது. ஷஹித் அப்ரிடியை பாக்த்டூன்ஸ் எடுத்துள்ளது. இங்கிலாந்து அணித்தலைவர் மோர்கனை கேரளா கிங்ஸ் அணியும், மேற்கிந்திய தீவுகளின் டேரன் சமியை நோர்தன் வாரியர்ஸ் அணியும் எடுத்துள்ளது. ஷேன் வொட்சனை கராச்சியன்ஸ் அணி எடுத்துள்ளது. ஏனைய வீரர்களுக்கான ஏலம் செப்டம்பர் மாதம் நடைபெறுகிறது.

No comments:

Post a Comment