திரைப்பட கூட்டுத்தாபனத்திற்கும் நிறுவனங்களுக்கும் இடையில் கைச்சாத்திட்டப்பட்ட ஒப்பந்தங்கள் சட்டவிரோதமானது - News View

About Us

About Us

Breaking

Saturday, June 30, 2018

திரைப்பட கூட்டுத்தாபனத்திற்கும் நிறுவனங்களுக்கும் இடையில் கைச்சாத்திட்டப்பட்ட ஒப்பந்தங்கள் சட்டவிரோதமானது

திரைப்பட கூட்டுத்தாபனத்திற்கும் நிறுவனங்களுக்கும் இடையில் கைச்சாத்திட்டப்பட்ட ஒப்பந்தங்கள் சட்டவிரோதமானது என்று உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார். தேசிய திரைப்படத்துறை பாரிய பிரச்சனையை எதிர்நோக்குவதாக என்றும் அவர் கூறினார்.

சகல தரப்புகளுடனும் கலந்துரையாடி இலங்கையின் திரைப்படத்துறையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கை குறுகிய காலப்பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ளது.

திரைப்பட துறையின் வீழ்ச்சிக்கான காரணங்கள் இனங்காணப்பட வேண்டியது அவசியமாகும். 2000ம் ஆண்டு முதல் நான்கு நிறுவனங்களுக்கு மாத்திரமே திரைப்பட ஒளிபரப்புக்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தது. 

இந்த ஏகபோக உரிமையால் திரைப்பட துறைக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. திரைப்பட கூட்டுத்தாபனத்திற்கும் இந்த நிறுவனங்களுக்கும் இடையில் கைச்சாத்திட்டப்பட்ட ஒப்பந்தங்கள் சட்டவிரோதமானது என்றும் அவர் கூறினார். 

இதேவேளை, பிரதான நகரங்களில் உயர்தரத்திலான திரையரங்குகள் அமைக்கப்படவுள்ளன.

No comments:

Post a Comment