ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி இரண்டாவது நாள் நடைபயணம் - News View

About Us

About Us

Breaking

Monday, June 18, 2018

ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி இரண்டாவது நாள் நடைபயணம்

சிறைத்தண்டனை பெற்றுள்ள ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி பிக்குகள் மேற்கொண்டுள்ள நடை பயணம் இன்று இரண்டாவது நாளாகவும் இடம்பெறுகின்றது. 

காலி மாவட்டத்தில் உள்ள விகாரைகளின் தேரர்களால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள இந்த நடைபயணம் நேற்று (18) காலி நகரில் இருந்து ஆரம்பிக்கப்பட்டதுடன், அந்த நடைபயணம் கொழும்பு வரை தொடர உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இரண்டாவது நாள் நடை பயணம் இன்று காலை 09.30 மணியளவில் சீனிகம தேவாலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்த நடைபயணம் இன்று (19) அளுத்கம வரையில் தொடரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment