ஞானசார தேரரின் மேன்முறையீட்டு மனு பிற்போடப்பட்டது - News View

About Us

About Us

Breaking

Monday, June 18, 2018

ஞானசார தேரரின் மேன்முறையீட்டு மனு பிற்போடப்பட்டது

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர், கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக்கோரி முன்வைக்கப்பட்ட மேன்முறையீடு, எதிர்வரும் ஜூன் 22 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்றையதினம் (19) ஹோமாகம மேல் நீதிமன்றில் குறித்த மேன்முறையீடு தொடர்பில் ஆராயப்படவிருந்த நிலையில், சட்ட மா அதிபர் திணைக்களம் சார்பில் முன்னிலையாகும் அரச சட்டத்தரணிகள் முன்னிலையாகாததை அடுத்து, குறித்த மனு ஒத்தி வைக்கப்பட்டப்பட்டது.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்த்யா எக்னலிகொடவை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்ட ஞானசார தேரருக்கு, 06 மாதங்கள் ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஞானசார தேரருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டமைக்கு எதிராக, ஒரு சில அமைப்புகளைச் சேர்ந்த தேரர்களால் நேற்றைய தினம் (18) பிற்பகல் கொழும்பு புறக்கோட்டை பகுதியிலுள்ள அரச மரத்தடியில் சத்தியக்கிரக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக புறக்கோட்டை பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment