பிரபல பாதாளக்குழுத் தலைவரான மாகதுரே மதுஷுடன் மிக நெருக்கமான ஒருவர் கைது - News View

About Us

About Us

Breaking

Monday, June 4, 2018

பிரபல பாதாளக்குழுத் தலைவரான மாகதுரே மதுஷுடன் மிக நெருக்கமான ஒருவர் கைது

தலைமறைவாக உள்ள பிரபல பாதாளக்குழுத் தலைவரான மாகதுரே மதுஷுடன் மிக நெருக்கமான ஒருவரான நிரோஷன் பல்லியகுருகே மற்றும் அவருடைய கள்ள மனைவியை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து கொழும்பு கோட்டை பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்படுள்ளனர்.  இவர்களிடம் இருந்து 2 கிராம் 900 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட வாக்குமூலத்தின் அடிப்படையில் கல்கிஸ்ஸை பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து மேலும் 7 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அத்துடன் நிரோஷன் பல்லியகுருகேயின் கள்ள மனைவின் கணவரான பிரபல பாதாள குழு உறுப்பினர் தெவுன்தர சமில் என்பவருடைய பெயரில் இருந்த 40 கோடி மதிக்கத்தக்க சொத்தும், 40 இலட்சம் பணம் முதலிடப்பட்டிருந்து வங்கி கணக்கு புத்தகமும் 20 க்கும் அதிகமான வங்கி அட்டைகளும் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

குறித்த சந்தேகநபர்களை இன்று (04) கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது, அவர்களை 7 நாள் சிறையில் வைத்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment