நாளை புதிய பிரதி சபாநாயகர் தெரிவு - News View

About Us

About Us

Breaking

Monday, June 4, 2018

நாளை புதிய பிரதி சபாநாயகர் தெரிவு

பிரதி சபாநாயகர் பதவிக்கு பலர் முன்மொழியப்படும் பட்சத்தில், அதற்காக இரகசிய வாக்கெடுப்பு நடாத்தப்படும் என பாராளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் அந்த பதவிக்கு இதுவரை எந்த கட்சியும் பெயர்களை முன்வைக்கவில்லை என பாராளுமன்றத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இலங்கை பாராளுமன்றத்தின் புதிய பிரதி சபாநாயகர் நாளை தெரிவு செய்யப்படவுள்ளார்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்து அரசாங்கத்திலிருந்தும், பிரதி சபாநாயகர் பதவியிலிருந்தும் திலங்க சுமத்திபால விலகியுள்ளமையால் அந்த பதவி வெற்றிடமாகியுள்ளது.

பிரதி சபாநாயகராக பதவி வகித்த திலங்க சுமத்திபாலவின் இராஜினாமா நாளை பாராளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற பிரதி பொதுச் செயலாளர் நீல் இத்தவெல தெரிவித்தார்.

No comments:

Post a Comment