கிழக்கு முதலமைச்சர் பதவியை தாரை வார்க்கிறது கூட்டமைப்பு - காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் பிரதி தவிசாளர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 19, 2018

கிழக்கு முதலமைச்சர் பதவியை தாரை வார்க்கிறது கூட்டமைப்பு - காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் பிரதி தவிசாளர்

கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை தாரை வார்த்து கொடுக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை முன்கூட்டியே தயார் நிலையில் உள்ளது விளங்குகின்றது என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் காரைதீவு பிரதேச அமைப்பாளரும், காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் பிரதி தவிசாளருமான வீரகத்தி கிருஷ்ண மூர்த்தி தெரிவித்தார்.

அவருடைய அலுவலகத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து பேசியபோதே அவர் இவ்வாறு கூறினார். அவர் இங்கு மேலும் பேசியவை வருமாறுஇ

வட மாகாண சபை இன்னமும் கலைக்கப்படவில்லை. ஆனால் அதன் அடுத்த முதலமைச்சர் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை ஆராய்ந்து வருகின்றது. அது குறித்து ஊடகங்களுக்கு பிரஸ்தாபிக்கவும் செய்கின்றது. 

ஆனால் கலைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் குறித்து அது கிஞ்சித்தும் சிந்திப்பதாக தெரியவில்லை. அதன் அர்த்தம் இம்முறையும் கிழக்கு மாகாண சபையை தாரை வார்த்து கொடுக்க தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முன்முடிவு எடுத்து விட்டனர் என்பதாகும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாண முதலமைச்சர் குறித்து அறிய இம்மாகாணத்தை சேர்ந்த தமிழ் மக்கள் பேராவலாக உள்ளனர். இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாண முதலமைச்சர் யார்? என்பதை சம்பந்தன் ஐயா பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். ஆயினும் அவர் அவ்வாறு செய்யமாட்டார் என்றே கொள்ள வேண்டி உள்ளது.

No comments:

Post a Comment