யாழ். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்குவில் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு (18) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொக்குவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த, 28 மற்றும் 24 வயதுடைய இளைஞர்கள் இருவரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொக்குவில் கிழக்கு பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள், குறித்த இருவர் மீதும் வாள்வெட்டை மேற்கொண்டு விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
இதேவேளை, யாழ். மல்லாகம் பகுதியில் நேற்றுமுன்தினம் இரு தரப்பினருக்கு இடையில் மோதல் ஏற்பட்டிருந்த நிலையில், பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment