இந்த நாட்டு முஸ்லிம்களின் உரிமைகளுக்காக போராடிய ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவரே சட்டத்தரணி எம்.ஐ.எம். நூர்தீன் அவர்களாகும்: அவரின் மரணச் செய்தி கேட்டு நான் ஆழ்ந்த கவலையடைந்தேன் என பெருந்தெருக்கல் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆபிரிக்காவிலிருந்து விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அவருடைய அந்த அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது சட்டத்தரணி நூர்தீன் அவர்களின் மரணச் செய்தியை கேட்டு நான் ஆழ்ந்த கவலையடைந்தேன்.
சமூகத்தில் தனது இறுதி மூச்சு வரை பல் வேறு பட்ட சமூகப் பணிகளில் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டு அர்ப்பணிப்புடன் சமூகத்துக்காக பாடுபட்ட நமது காத்தான்குடியின் முக்கிய கல்விமானை இழந்து நிற்கின்றோம்.
அல்லாஹ்வின் நாட்டத்தின் பிரகாரம் பிறந்த எல்லோருக்கும் மரணம் இருக்கின்றது. அந்த வகையில் நமது மண்ணில் வாழ்ந்து கொண்டிருந்த மூத்த சட்டத்தரணி ஒரு கல்வி மாண் இந்த நாட்டில் முஸ்லிம்களின் உரிமைகளுக்காக போராடிய ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூத்த உறுப்பினர் சட்டத்தரணி நூர்தீன் அவர்களாகும்.
அவரின் இழப்பு காத்தான்குடி மக்களுக்கு ஏற்பட்ட ஒரு பெரிய இழப்பாகும். குறிப்பாக அவர் பல் வேறுபட்ட சமூகப்பணிபளில் முழுமையாக ஈடுபட்டு வந்தார்.
அவருக்காக நாங்கள் எல்லோரும் பிராத்திக்க வேண்டும். நான் இப் போது ஆபிரிக்கா நாட்டில் நடைபெறும் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கின்ற காரணத்தில் அவரது ஜனாசா நல்லடக்க நிகழ்வில் கலந்து கொள்ள முடியாதையையிட்டு மிகவும் மனம் வருந்துகின்றேன்.
அவரின் நல்ல அமல்களை அல்லாஹ் அங்கீகரித்து அவருக்கு உயர்தரமான ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனத்தை வழங்க வேண்டும் என பிராத்திப் போமாக என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்.எஸ்.எம்.நூர்தீன்
No comments:
Post a Comment