இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்கு ஐவர் அடங்கிய தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு மற்றும் மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி சபை அமைச்சர் பைஸர் முஸ்தபாவினால் நியமிக்கப்பட்டுள்ள குறித்த குழுவுக்கு, கிரேம் லெப்ரோய் தலைவராக செயற்படவுள்ளார்.
காமினி விக்ரமசிங்க, எரிக் உபஷாந்த, சந்திக ஹத்துருசிங்க, ஜெரில் வொட்டர்ஸ் ஆகியோர் தெரிவுக் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.
விளையாட்டு மற்றும் மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி சபை அமைச்சர் பைஸர் முஸ்தபாவினால் நியமிக்கப்பட்டுள்ள குறித்த குழுவுக்கு, கிரேம் லெப்ரோய் தலைவராக செயற்படவுள்ளார் என்பதோடு, தொடருக்கான தெரிவாளராக சந்திக ஹத்துருசிங்க செயற்படவுள்ளார்.
ஒரு வருட காலத்திற்கு பெயரிடப்பட்டுள்ள குறித்த குழுவின் பதவிக் காலம் மே மாதம் 16 ஆம் திகதி முதல் அமுலாவதாக, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரேம் லெப்ரோய் - தலைவர்
காமினி விக்ரமசிங்க - உறுப்பினர்
எரிக் உபஷாந்த - உறுப்பினர்
சந்திக ஹத்துருசிங்க - உறுப்பினர்
ஜெரில் வொட்டர்ஸ் - தொடருக்கான தெரிவாளர்
ஜெரில் வொட்டர்ஸ் - உறுப்பினர்
No comments:
Post a Comment