அலோசியஸ் உடன் தொலைபேசியில் உரையாடியவர்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் அறிக்கை - News View

About Us

About Us

Breaking

Sunday, June 3, 2018

அலோசியஸ் உடன் தொலைபேசியில் உரையாடியவர்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் அறிக்கை

பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் உடன் தொலைபேசி உரையாடல்களை மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் இவ்வாரம் பாராளுமன்றத்தில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சபாநாயகர் கரு ஜயசூரியவினால் இந்த அறிக்கை வெளியிடப்பட உள்ளது. 

அர்ஜுன் அலோசியஸிடம் இருந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பணம் பெற்றதாக பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன. 

இது தொடர்பில் சபாநாயகர் பாராளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும் என அரசியல் கட்சி உறுப்பினர்களும் சிவில் அமைப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதனால் அர்ஜுன் அலோசியஸ் உடன் தொலைபேசி உரையாடல்களை மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியலை தன்னிடம் ஒப்படைக்குமாறு ஜனாதிபதி செயலாளரிடம் சபாநாயகர் கரு ஜயசூரிய வேண்டுகோள் விடுத்துள்ளார். 

அதன்படி, ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்ணாந்து அது தொடர்பில் நீதிபதிகளின் ஆலோசனைகளை கேட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

எவ்வாறாயினும் அர்ஜுன் அலோசியஸிடம் இருந்து பணம் பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியல் பிணைமுறி ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ளடங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. 

இருப்பினும் சீ 350 என்ற அறிக்கை பிணைமுறி ஆணைக்குழுவின் அறிக்கையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment